QR Code மூலம் பரப்புரை மேற்கொள்ளும் புதிய யுக்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சி பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
மக்களவை தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சிதம்பரம் (தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், கடந்த ஒரு வாரமாக மக்களை சந்தித்து தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, டிஜிட்டல் வழி அதிகளவு இளைஞர்களிடம் தங்களது கட்சியை கொண்டுபோய் சேர்க்கும் விதமாக ‘QR Code’ மூலம் பரப்புரை மேற்கொள்ளும் புதிய யுக்தியை விசிக கையில் எடுத்துள்ளது. பரப்புரை வாசகங்களுடன், QR Code-ம் இடம்பெற்ற போஸ்டர்களை தயாரித்து பல்வேறு பகுதிகளில் விசிகவினர் ஒட்டியுள்ளனர்.
https://twitter.com/thirumaofficial/status/1776944574675714348
இந்த ‘QR Code’-ஐ செல்போனில் ஸ்கேன் செய்தால், திரையில் திருமாவளவன் தோன்றி மக்களவை தேர்தலின் முக்கியத்துவம், மக்கள் ஏன் தனக்கு வாக்களிக்க வேண்டும், தனக்கும் தொகுதிக்குமான உறவுகள் குறித்து பேசும் வீடியோ ஒளிபரப்பாகும்.
இதையும் படியுங்கள் : நெல்லையில் தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காத 14 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அங்கு
ஒட்டப்பட்டிருந்த பரப்புரைக்கான QR code -யை தங்களின் செல்போனில் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர்.







