“உங்கள் பணத்தை சேமித்து வையுங்கள்”- அமேசான் நிறுவனர் அறிவுரை

பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட உங்கள் பணத்தை சேமித்து வைத்து கொள்ளுங்கள் என அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் கூறியுள்ளார். அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.…

பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட உங்கள் பணத்தை சேமித்து வைத்து கொள்ளுங்கள் என அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் கூறியுள்ளார்.

அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். வரும் காலங்களில் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.

அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையை எதிர்நோக்கி கொண்டிருப்பதால் இந்த சந்தர்ப்பத்தில், புதிய கார்கள், தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி போன்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதை தற்காலத்திற்கு தவிர்க்க வேண்டும். பொருளாதார மந்த நிலை காரணமாக பல துறைகளில் பணிநீக்கங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற விஷயங்களை பின்பற்றினால் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும் என்று கூறினார்.

மேலும், $ 124 பில்லியன் நிகர மதிப்பில் பெரும்பகுதியை காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் பிளவுகளுக்கு மத்தியில் மனிதகுலத்தை ஒருங்கிணைக்கக்கூடிய மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.