முக்கியச் செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து: கத்தாரை வீழ்த்தி ஈகுவடார் அணி வெற்றி

கால்பந்து உலக கோப்பையின் முதல் போட்டியில் ஈகுவடார் அணி கத்தார் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க நாளான நேற்று ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே அதிரடி தாகுதலை தொடுத்த ஈகுவடார் அணி அபாரமாக ஆடியது.

அந்த அணிக்கு ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை என்னர் வலென்சியா கோலாக்கினார். இதனால் ஈகுவடார் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இதையடுத்து 31 வது நிமிடத்தில் வலென்சியா மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அந்த அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டாலும் இறுதியில் கோல அடிக்க இயலவில்லை. இதனால் இரண்டாம் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இறுதியில் ஈகுவடார் அணி முதல் பாதியில் அடித்த இரண்டு கோல்களின் அடிப்படையில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே வண்டியின் சக்கரங்கள்” – எடப்பாடி பழனிசாமி

G SaravanaKumar

அதிமுகவிற்கு ஆதரவாக நடிகர் கஞ்சா கருப்பு பரப்புரை!

Gayathri Venkatesan

அதிமுகவின் உண்மை தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்-ஓபிஎஸ்

G SaravanaKumar