கட்டுரைகள்

சாக்லேட் கடவுளின் பரிசு


கிருத்திகா

கட்டுரையாளர்

சாக்லேட்… இந்த பெயரை கேட்டால் போதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நாவிலும் இனிப்புச்சுவை ஒட்டிக்கொள்ளும்.. விவரம் எதுவும் தெரியாத குழந்தை பருவக்காலத்தில், சாக்லேட் சுற்றப்பட்டிருக்கும் பேப்பரை கண்டதுமே, அதை பிரித்து உண்ணத் தூண்டும். உலகத்தின் எந்த மூலையிலும் சாக்லேட் சாப்பிடாதவர்களே இருக்க முடியாது.

ஏன் உலகளவில் பார்க்க வேண்டும்?

நம்மில் பலர், பள்ளிப் பருவத்தில், வீட்டில் சிறிய வேலை செய்து கொடுத்து அம்மா, அப்பாவிடம் ஒரு ரூபாய் வாங்கி, தெருவோர பெட்டிக் கடையில் ஒரு சாக்லேட் வாங்கி சுவைத்திருப்போம். அந்த அனுபவத்தை எழுத்தில் வர்ணிக்க இயலாது. அது மட்டுமில்லாமல், ஸ்கூல் படிககும்போது, யாருக்காவது பிறந்தநாள் வந்தால், அந்த நபர், எப்போது நம்மிடம் வந்து சாக்லேட் கொடுப்பாங்கன்னு காத்திருந்து, நாம் எடுத்ததும் வருமே ஒரு சந்தோஷம்! அப்படியாக நம்மை கவர்ந்து இழுப்பதுதான், சாக்லேட்டின் ஸ்பெஷல்..

இன்று வரை காதல், அன்பு, பாசம் என அனைத்து சந்தோஷ மனநிலையிலும் ஒருவருக்கொருவர், சாக்லேட் கொடுத்துதான் பறிமாறிக் கொள்கிறோம். சாக்லேட்டின் விலையில், அதன் சுவையில் மாறுபாடு இருந்தாலும், அவர்கள் பறிமாறிக் கொள்ளும் அன்புக்கு சாக்லேட் அசைக்க முடியாத அடையாளமாகியுள்ளது, என்பது மறுக்க முடியாத உண்மை. அன்புக்குரியவர்கள் கொடுத்த சாக்லேட் பேப்பர் கூட, காலத்தால் அழிக்க முடியாத நினைவு சின்னமாவும் மாறிவிடுகிறது.

இப்படி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் சாக்லேட்டின் இனிப்பான வரலாறு என்ன தெரியுமா? சுமார் 470 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கி.பி.1,550-ம் ஆண்டு வட அமெரிக்காவின் மெசோ அமெரிக்காவில்தான் முதன்முதலில் சாக்லேட் உருவானது. கொக்கோ மரத்தின் பழத்திலிருந்து சாக்லேட் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருள் எடுக்கப்படுகிறது.

ஒரு கொக்கோ பழத்தில் 20 முதல் 60 விதைகள் வரை இருக்கும். இந்த விதைகள், நொதித்தல், உலர்த்துதல், வறுத்தல், அரைத்தல் என்று பல நிலைகளுக்கு பிறகு, இறுதியாக சாக்லேட் வடிவம் பெற்று, நம்மை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கிறது.

இந்த சாக்லேட்டுகளை உலகத் தரத்தில் உயர்த்தியதில், தனியார் நிறுவனங்களுகே முக்கியப் பங்கு உண்டு. சாக்லேட் வியாபாரத்திற்காக மாபெரும் தொழிற்சாலைகளை அமைத்து, சாக்லேட் தயாரிப்பின் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். மேலும், பலவகையிலும் சுவையான சாக்லேட்டுகளை தயாரித்து, மக்களை தங்கள் வசம் கட்டி வைத்திருப்பதும் நிதர்சனம்.

அக்காலத்தில் மெக்சிகோ மக்கள் சாக்லேட் விதைகளை, கடவுளின் பரிசு என்றே நம்பினார்கள். அது இன்றளவும் மறுக்கமுடியாத உண்மைதானே…! இந்த சாக்லேட்களில், இயல்பாகவே, உடலில், மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய “செரோடோடின்” என்னும் வேதிப்பொருள் இருப்பதுதான் காரணம்.

ஆண்டுதோறும் ஜூலை 7-ம் தேதி உலக சாக்லேட் தினமாக சாக்லேட் பிரியர்களால் கொண்டாடப்படுகிறது. இன்றளவும் ஒவ்வொரு சூழலிலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் மருந்தாகவே மாறியிருக்கிறது சாக்லேட்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி 3-வது டோஸ் அவசியமா?

Gayathri Venkatesan

மாவீரன் மங்கள் பாண்டேவின் பிறந்த நாள் இன்று

Vandhana

தமிழ்நாட்டையே அதிரவைத்த கும்பகோணம் தீ விபத்து!

Ezhilarasan