நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் நாகை மீனவர்கள்: காப்பாற்றுங்கள் என்று கதறும் உறவினர்கள்

நடுக்கடலில் படகு கவிந்து, நாகையைச் சேர்ந்த 10 மீனவர்கள் உயிரிக்குப் போராடி வருகின்றனர். இவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை…

நடுக்கடலில் படகு கவிந்து, நாகையைச் சேர்ந்த 10 மீனவர்கள் உயிரிக்குப் போராடி வருகின்றனர். இவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

அரபிக் கடலை நோக்கி நாகை மீனவர்கள் அதிகாலை மூன்று மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேக புயலில் படகு சிக்கியது. இதனால் படகில் பயணித்த 10 பேரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.

இதனை அறிந்த மீனவர்களின் உறவினர்கள் புயலில் சிக்கி மாயமான 10 மீனவர்களை மீட்க வேண்டும் என்று கண்ணீர் மல்க மத்திய மற்றும் மாநில அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியக் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் கொண்டு தேடுதல் பணியை முடுக்கி விட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.