ஆவின் பால் விலை குறைப்பு: முழு விவரங்கள்

தமிழக அரசின் அறிவிப்பின்படி ஆவின் பால் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. கடந்த 7 ஆம்…

தமிழக அரசின் அறிவிப்பின்படி ஆவின் பால் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. கடந்த 7 ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது.

ஆவின் நீல நிறப் பாக்கெட் ஒரு லிட்டர் ரூ 40-க்கும், பச்சை நிறப்பாக்கெட் ஒரு லிட்டர் ரூ 44-க்கும், ஆரஞ்சு நிற பாக்கெட் ஒரு லிட்டர் ரூ. 48-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைப்பால் ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.