நீதிமன்ற வளாகங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டும்: தமிழக பார் கவுன்சில் தலைவர் கடிதம்

நீதிமன்ற வளாகங்களில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து…

நீதிமன்ற வளாகங்களில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. இந்திய அளவில் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குப் படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த சிக்கல் இருக்கிறது.

புதிதாகப் பொறுப்பேற்ற திமுக அரசு அதிரடியாகப் பல கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் கொரோனாவின் பரவல் வேகம் எடுத்து வருவதால் ஆக்சிஜன் படுக்கைகளின் தேவை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நீதிமன்ற வளாகங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார்.

வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் பாதிக்கப்படும் போது மருத்துவ மனையில் படுக்கை, சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும் இதனைத் தடுக்க கொரோனா சிகிச்சை மையத்தை நீதிமன்ற வளாகங்களில் அமைக்க வேண்டும் என்றும் அவர் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.