லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி வீரராக ஒப்பந்தமான பின்னர் MLS ஐ விட சவுதி புரோ லீக் சிறந்தது என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறினார்.
மெஸ்ஸியும் ரொனால்டோவும் ஐரோப்பாவில் பல பெரிய போட்டியைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் பரம-எதிரிகளான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவுக்காக விளையாடினர். பின்னர் ரொனால்டோ தனது ஐரோப்பிய பயணத்தை இந்த ஆண்டு ஜனவரியில் முடித்துக்கொண்டார். தொடர்ந்து அவர் சவுதி புரோ லீக்கில் அல் நாசருடன் சேர முடிவு செய்தார்.
ESPN மேற்கோள் காட்டியபடி செல்டா விகோவிற்கு எதிரான பேசிய ரொனால்டோ , MLS ஐ விட சவுதி புரோ லீக் சிறந்தது என்றும், அமெரிக்காவிற்குச் செல்வதைக் கருத்தில் கொள்ளப் போவதில்லை என்றும் கூறினார்.
ரொனால்டோ அல் நாசரில் சேர்ந்ததிலிருந்து, சவுதி ப்ரோ லீக்கில் திறமையானவர்களின் பெருவாரியான வருகை உள்ளது, கரீம் பென்சிமா , என்’கோலோ காண்டே மற்றும் ரூபன் நெவெஸ் ஆகியோர் அல்-இத்திஹாத் மற்றும் அல்-ஹிலால் போன்ற அணிகளில் இணைந்தனர்.







