மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்: மருமகனை கத்தியால் குத்திய மாமனார் உள்பட 3 பேர் கைது!

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே காதல் திருமணம் செய்ததால் மருமகன் மீது மிளகாய் பொடி தூவி கத்தியால் குத்திய மாமனார் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தாளவாடி அருகே திகினரை…

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே காதல் திருமணம் செய்ததால் மருமகன் மீது மிளகாய் பொடி தூவி கத்தியால் குத்திய மாமனார் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தாளவாடி அருகே திகினரை கிராமத்தில் விக்னேஷ் என்கிற இளைஞர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருடைய மகள் ஜோதியை
திருமணம் செய்தார். இந்த நிலையில், தன் மகளை காதல் திருமணம் செய்த மருமகன் மீது ஆத்திரம் அடைந்த மாமனார் பால்ராஜ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த விக்னேஷ், வீட்டில் தனியாக இருந்தபோது தனது மனைவி துளசியம்மா, மகன் மைனர் ராகுல் ஆகியோருடன் சென்று மிளகாய் பொடி தூவி, கத்தியால் தாறுமாறாக குத்தி அங்கிருந்து தப்பி ஓடினர்.

ஆபத்தான நிலையில் இருந்த விக்னேஷ் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து,  சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தப்பியுயோடிய மூன்று பேரை தாளவாடி காவல் துறையினர் இரண்டு
தனிப் படை அமைத்து தேடி வந்தனர்.

இவர்கள் பால்ராஜ் உறவினரின் தோட்டத்தில் இருப்பது தெரிந்து, மூன்று பேரையும் தாளவாடி காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

— ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.