ஒலிம்பிக் ஆடவர் டேபிள் டென்னிஸ்: போராடித் தோற்றத் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் 2வது சுற்றில் தோல்வியடைந்தார். டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளானா நேற்று…

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் 2வது சுற்றில் தோல்வியடைந்தார்.

டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளானா நேற்று மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வாங்கினார். நேற்று மாலை 4.15 மணிக்கு நடந்த 69 கிலோ குத்துச்சண்டை பிரிவுக்கான முதல் சுற்றுலே விகாஸ் கிரிஷன் தோல்வியடைந்தார். இதைத்தொடர்ந்து நடந்த இந்திய மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இன்று நடந்த ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் 3வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தேர்வானார். தொடர்ந்து பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதைத்தொடர்ந்து மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா அணி உக்ரைன் கிச்நொக் இரட்டையர்களிடம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆடவருக்கான டேப்பிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக வீரர் சதயன் ஞானசேகரன் இரண்டாவது சுற்றில் தோல்வியை தழுவினார். 7-11, 11-7, 11-4, 11-5, 9-11, 10-12, 6-11 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரர் லேம் சியூ ஹேங்கிடம் அவர் தோல்வியடைந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.