நடிகர் சதீஷின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் ‘மெரினா, எதிர்நீச்சல், கத்தி, மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் சதீஷ் ‘நாய் சேகர்’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
அடுத்ததாக ‘ஓ மை கோஸ்ட்’, கான்ஜுரிங் கண்ணப்பன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக இவர் நடித்துள்ள ‘சட்டம் என் கையில்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் சதீஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு, “ரோலக்ஸ் ஆக உணருகிறார்…” என தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் தமிழ்ப்படம் 3 உருவாகிறதா என இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ்படம்சிஎஸ் அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம். இதனையடுத்து வெளியான தமிழ்ப்படம் 2 திரைப்படத்தில் நடிகர் சதீஷ் விதவிதமான கெட்டப்களில் நடித்திருந்தார்.
இந்த சூழலில், சதீஷ் இதுபோன்ற புகைப்படத்தை பதிவிட்டிருப்பதாலேயே ரசிகர் இது போன்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் தமிழ்படம் 3 உருவாகிறதா என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ரோலக்ஸ் என்பது லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்த தாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.







