சாத்தான்குளம் கொலை வழக்கு ; குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு ….!

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் மரணதண்டனை வித்திது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த மாதம் 23- ஆம் தேதி மதுரை மாவட்ட அமர்வு நீதிம்னற நீதிபதி முத்து குமரன் தீர்ப்பளித்தார். தொடர்ந்து குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காராணங்களால் தண்டனை விவரங்கள் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு இன்று அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் படி இன்று நீதிமன்றத்தில் மத்திய மாநில அரசுகள் தண்டனை குறித்த தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளன. தமிழ் நாடு அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் காவல் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மத்திய அரசு தரப்பில் காவல் நிலைய மரண வழக்கில் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து  குற்றவாளிகள் 9 பேருக்கான தண்டனை விபரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் நீதிபதி அறித்துள்ள தீர்ப்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகிய 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.