சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு ஒத்தி வைப்பு!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ்…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ்
– பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல் துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட
வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள்
பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள்
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும்
நேரில் ஆஜராகினர்.

இதனையடுத்து வழக்கு விசாரணையானது நீதிபதி முன்பாக வந்தபோது 73 வது சாட்சியாக சாத்தான்குளம் காவல்நிலைய தூய்மை பணியாளரான மாற்றுத் திறனாளியான வேல்முருகன் தந்தை மகன் விசாரணைக்கு பின்னர் காவல்நிலையத்தில் இருந்த ரத்தக்கரையை துடைத்தது குறித்து சாட்சியம் அளித்ததாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூலை -1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.