தனுஷின் யாரடி நீ மோகினி, குட்டி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கவர் மித்ரன் ஜவஹர். நீண்ட இடைவேளைக்கு பிறகு மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜாலியான மியூஸிக்கல் காமெடி படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்திற்கு இசை ரவுடி அனிருத் இசையமைக்கிறார்.
7 வருடங்களுக்கு பிறகு தனுஷின் நடிப்பிலும், லிரிக்கிலும் அனிருத் இசையமைக்கும் பாடல் என்பதால் இருதரப்பு ரசிகர்களிடமுமே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது இந்த தாய் கிழவி பாடல். தனுஷின் அதிரடியான நடத்தினாலும் பிரியாபவானி சங்கரின் குறும்பான ரியாக்ஷன்களாலும், நித்யா மேனனின் சுவீட்டான கோபத்தாலும் நகர்ந்து கொண்டிருந்த பாடலின் இடையில் புகுந்து தீரென ஒரு குத்தாட்டத்தை போட்டுள்ளார் நம் பாசத்திற்குரிய பாரதிராஜா. முள்ளும் மலரும் படத்தில் ஒரு பொட்டிக்கடை அருகே இசை கலைஞர்களை மடக்கி வாசிக்கச்சொல்லி ரஜினி ஆடுவது போலான ஒரு 80s நடனத்தை அசால்டாக போட்டுள்ளார் பாரதிராஜா!
இதுபோக தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ‘ரகிட ரகிட’ பாடலின் ’எதோ ஒன்ன கொடுக்கத்தானே அடுத்த நாளும் வருது’ எனும் வரிகளின் போது ஹீரோயினுக்கு அருகில் வந்து ‘கியூட்’ ஆன ஒரு ஸ்டெப்பை போட்டு இணையவாசிகளிடம் பக்கெட் பக்கெட்டாக ஹார்டின்களை வாரிக்குவித்த அந்த கியூட்டியும் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிற்து.
வாட்ட கருவாட், வாட்ட கருவாட் என்பதே பிற்காலத்தில் மருவி தாய் கிழவி.. தாய் கிழவி.. என ஆனது என வருங்கால சந்ததிகளுக்கும் பாடம் எடுக்க உதவுவது போல அதேபோலானதொரு பீட்டில் தான் இந்த பாடல் அமைந்துள்ளது. அனியின் ரகளையான இசையாலும், தனுஷின் ராவான நடனத்தாலும் இப்பாடல் பாசத்திற்குரிய பாரதிராஜா போலவே அனைவரையும் பரவசநிலைக்கு அழைத்து சென்றுள்ளது.








