நாளை விடுதலையாகிறார் சசிகலா!

4 ஆண்டு கால சிறைவாசத்திற்கு பின், சசிகலா நாளை காலை விடுதலை செய்யப்படுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 2017ம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்,…

4 ஆண்டு கால சிறைவாசத்திற்கு பின், சசிகலா நாளை காலை விடுதலை செய்யப்படுகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 2017ம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கடந்த 20-ஆம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சசிகலாவின் 4 ஆண்டுகால தண்டனை காலம், நாளையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து சசிகலாவின் விடுதலைக்கான முழுப்பணிகள் முடிவடைந்து, கர்நாடக உள்துறை அமைச்சகமும் விடுதலை செய்ய அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் சசிகலாவின் விடுதலை பத்திரத்தில், நாளை காலை 9.30 மணி அளவில், அவர் சிகிச்சை பெறும் விக்டோரியா மருத்துவமனைக்கே சென்று, சிறைத்துறையினர் கையொப்பம் பெற உள்ளனர். அதனை தொடர்ந்து சிறை நடவடிக்கைகள் முடிவடைந்து, காலை 10.30 மணியளவில், சசிகலா விடுதலை செய்யப்படுவார், என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply