இந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தர் சிலை: புத்த கயாவில் நிறுவப்படுகிறது!

இந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தர் சிலை பீகார் மாநிலம் புத்த கயாவில் விரைவில் அமையவுள்ளது. தமிழகத்தில் திருவள்ளுவருக்கு 133 அடியில் முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில் சிலை அமைந்துள்ளது. சமீபத்தில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு குஜராத்தின்…

இந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தர் சிலை பீகார் மாநிலம் புத்த கயாவில் விரைவில் அமையவுள்ளது.

தமிழகத்தில் திருவள்ளுவருக்கு 133 அடியில் முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில் சிலை அமைந்துள்ளது. சமீபத்தில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் 597 அடி உயரத்தில் ஒற்றுமை சிலை அமைக்கபட்டுள்ளது. இதேபோல கோவை ஈஷா யோகா மையத்தில் பிரமாண்ட மார்பளவு சிவன் சிலையும் அமைந்துள்ளது. இந்த வரிசையில் புத்தருக்கும் பிரமாண்ட சிலை அமையவுள்ளது.


இந்தியாவிலேயே மிகப் பெரிய புத்தர் சிலை கொல்கத்தா அருகேயுள்ள கோஸ்பரா நைனான் பந்தாப் சமிதி மைதானத்தில் தயாராகி வருகிறது. 100 அடி நீளம் கொண்ட இந்த புத்தர் சிலை அடுத்த வரும் புத்த பூர்ணிமா அன்று பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள கோயிலில் நிலை நிறுத்தப்படவுள்ளது. எனினும், சிலை வடிவமைக்கும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

புத்தர் இன்டர்நேஷனல் வெல்பேர் திட்டம் சார்பில் இந்த சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. புத்தர் சிலையை தயாரிக்கும் பிரபல சிற்பி மின்டு பால், சிலை தயாரிப்பில் கண்ணாடி இழைப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. நாம் மறைந்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக புத்தர் சிலை இம்மண்ணில் நிலைத்து நிற்கும் என்றார்.

“புத்தர் சிலை உருவாக்கப் பணிகளை 2019 மார்ச் மாதத்தில் தொடங்கினோம். கொரோனா பரவல் காரணமாக இடையில் நிறுத்திவிட்டோம். நவம்பர் மாதம் முதல் மீண்டும் சிலை தயாரிக்கும் பணிகள் மும்முறமாக நடந்து வருகிறது. மே 26ஆம் தேதிக்குள் முழுப் பணிகளும் முடிவுபெறும் என நம்புகிறோம்” என்று மிண்டு குறிப்பிட்டார்.

22 கைவினை கலைஞர்கள் சிலை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மிண்டு பால் ஏற்கனவே 80 அடி உயரமுள்ள துர்கா தேவி சிலையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply