முக்கியச் செய்திகள் தமிழகம்

ரஜினிக்கு சசிகலா வாழ்த்து; அதிமுக பொதுச்செயலாளர் என வாழ்த்து அறிக்கை

file

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இயக்குநர் கே பாலசந்தரால்,1975ஆம் ஆண்டு வெளியான ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருக்கும் ரஜினிகாந்த், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு ஆங்கிலம் என 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தப் படத்தில் நடிக்க அவர் கதை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது 71 வது பிறந்த தினத்தை அவர் இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி ரஜினிகாந்த் பவுண்டேஷன் மூலமாக 100 ஏழை மாணவர்களுக்கு TNPSC தேர்வுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அவர் ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர். அன்னதானம், ரத்ததான முகாம் உள்ளிட்ட முகாம்களையும் நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்கை அவர் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அவருக்கு நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என வி.கே.சசிகலா அறிக்கையின் வாயிலாக ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அன்பு சகோதரர் ரஜினிகாந்திற்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தங்களது அன்பும், நட்பும், சகோதர பாசமும் என்றென்றும் நிலைத்திருக்க எந்நாளும் இறைவனின் அருள் கிடைக்கப்பெற வேண்டும்.

நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.” என சசிகலா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

Halley Karthik

விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: அதிமுக கண்டனம்

Saravana Kumar

சிறைக்கு சென்று மகனை சந்தித்தார் ஷாருக்கான்

Halley Karthik