முக்கியச் செய்திகள் இந்தியா

லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங் உடலுக்கு ராஜ்நாத் சிங் இறுதி மரியாதை

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினால் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

கடந்த 8ம் தேதி தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதில் உயிரிழந்த லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங் உடல் இன்று டெல்லியில் ப்ரார் சதுக்கத்தில் வைக்கப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இதில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹர்ஜிந்தர் சிங் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங் ஆறுதல் தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர்

இதனையடுத்து ஹர்ஜிந்தர் சிங் உடலுக்கு அவரது மகள் எரியூட்டினார்.

சாய் தேஜா உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய ராணுவத்தினர்

இந்த விபத்து குறித்து முப்படைகள் சார்பில் உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இந்திய விமானப்படையின் பயிற்சி கட்டளைத் தளபதி மன்வேந்தர் சிங் தலைமையில் விசாரணையை மேற்கொள்கிறது.

அதேபோல ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சாய் தேஜாவின் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சாத்பால் ராய் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய ராணுவத்தினர்

இந்த விபத்தில் உயிரிழந்த மேலும் ஒரு ராணுவ வீரர் சாத்பால் ராய்க்கு மேற்கு வங்கத்தில் முழு ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement:
SHARE

Related posts

மறைந்த தந்தையை சிலையாக வடித்த சகோதரி; நெகிழ்ந்து போன மணமகள்!

Niruban Chakkaaravarthi

5 மாநில தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கான தடை நீட்டிப்பு

Halley Karthik

மளிகை கடைகள் திறப்பு நேரத்தை அதிகரிக்கவேண்டும்: வணிகர் சங்கம்