சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் – பிரதமர் மோடி மரியாதை!

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மலர் தூவப்பட்டது. மேலும் பிரதமர் மோடி குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொண்டு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.