விஜய் தேவரகொண்டாவை பின்னுக்கு தள்ளிய லெஜன்ட் சரவணன்

‘லைகர்’ படதத்பை அடித்துப் பிடித்து முதல் நாள் முதல் காட்சியைத் திரையரங்கிற்குச் சென்று பார்த்த ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். விஜய் தேவரகொண்டா தற்போது உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரரான…

‘லைகர்’ படதத்பை அடித்துப் பிடித்து முதல் நாள் முதல் காட்சியைத் திரையரங்கிற்குச் சென்று பார்த்த ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா தற்போது உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரரான மைக் டைசனுடன் இணைந்து நடித்திருக்கும் படம்தான் ‘லைகர்’ . தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் தயாரித்திருக்கும் இந்த படத்தைப் பூரி ஜெகன்னாத் இயக்கியுள்ளார்.

தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியாகியுள்ள ‘லைகர்’ படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். கடந்த 25ஆம் தேதி உலகமெங்கும் ‘லைகர்’ படம் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியானது. ஆனால் இப்படம் வெளியான நாள் முதலே நெகட்டிவ் விமர்சனங்களே குவிந்துவருகிறது.

அடித்துப் பிடித்து முதல் நாள் முதல் காட்சியைத் திரையரங்கிற்குச் சென்று பார்த்த ரசிகர்கள் இப்பத்தை மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபியில் இந்த படம் 10க்கு வெறும் 2.8 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் அறிமுக நடிகரான பிரபல தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் நடிப்பில் வெளியான ‘தி லெஜன்ட்’ படம் ஐஎம்டி பி இணையதளத்தில் 10க்கு 5.3 புள்ளிகளைப் பெற்று லைகர் திரைப்படத்தை முந்தியுள்ளது. இதைக் கண்ட நெட்டிசன்கள் இவ்விரு படங்களின் ரேட்டிக் தரவுகளை வைத்து இணையத்தில் சுவாரசியமான பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.