மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் சந்தானம்; நாளை அப்டேட் வெளியாகும் என அறிவிப்பு!

‘டிடி ரிட்டன்ஸ்’ படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் டிரைலர் நாளை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நடிகர் சந்தானம் சின்னத்திரையில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பின்னர் காமெடியனாக மட்டுமே தமிழ் படங்களில் நடித்து…

‘டிடி ரிட்டன்ஸ்’ படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் டிரைலர் நாளை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நடிகர் சந்தானம் சின்னத்திரையில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பின்னர் காமெடியனாக மட்டுமே தமிழ் படங்களில் நடித்து வந்தார். பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து அவர் ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் டிரைலர் நாளை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.