முக்கியச் செய்திகள் சினிமா

பாஸ் (எ) பாஸ்கரன் 2-ம் பாகத்தில் சந்தானம்?

நடிகர் ஆர்யாவுடன் பாஸ் என்கிற பாஸ்கர் முதல் பாகத்தில் சந்தானம் இணைந்து நடித்திருந்தார். இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

முதல் பாகத்தை ராஜேஷ் இயக்கியிருந்தார். அதில் சந்தானத்தின் காமெடி பெரிதும் பேசப்பட்டது. சந்தானம் கதாநாயகனாகிவிட்டதால் ஆர்யாவுடன் சந்தானம் இணைந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கான விடையை சந்தானமே தெரிவந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகர் ஆர்யாவும், இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும் மீண்டும் இணைந்துள்ள படம் கேப்டன். ஆக்சன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள கேப்டன் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது.

கேப்டன் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஆர்யாவுடன் சிம்ரன், ஐஷ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன், தவுபிக் ஷெர்ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து யுவன் பாடிய நினைவுகள் என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

அறிவியல் மற்றும் மிருகங்களை மையப்படுத்தி படங்களை எடுப்பவர் சக்தி சௌந்தர் ராஜன். இவர் இயக்கத்தில் வெளிவந்த நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி, ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றன.

அடுத்த மாதம் 8ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு ராயபேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, இமான், மதன் கார்க்கி, சந்தானம், தயாரிப்பாளர் தாணு, ஆர்பி.சவுத்ரி, விஷ்ணு வர்தன், அமீர், சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் சந்தானம் பேசுகையில், “காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஹீரோவாக நடிக்க தொடங்கிய பிறகு மீண்டும் காமெடி வாய்ப்புகள் வந்தன. கெஸ்ட் ரோல் பண்ணவும் கேட்டார்கள். ஆனால் நான் அதை எல்லாம் மறுத்துவிட்டேன். ஆனால் ஆர்யா பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகம் நடித்தால் நானும் நிச்சயம் நடிப்பேன். அந்த படத்தில் நடிக்கும் போதே ஆர்யாவிடம் சொன்னேன்.

உன் உடம்புக்கு அர்னால்டு மாதிரி ஏலியனிடம் சண்டை போடாமல் கும்பகோணத்துல வந்து காமெடி படம் பண்ணிட்டு இருக்க என்று கிண்டல் செய்தேன். தற்போது அது இந்தப் படம் மூலம் நிறைவேறியுள்ளது. அனைவரும் படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”அந்த விஷயம் மட்டும் நடந்திருந்தால் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியே தேவைப்பட்டிருக்காது”- ஓபிஎஸ் தரப்பு வாதம்

Lakshmanan

மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்; தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

G SaravanaKumar

ட்விட்டர் பக்கத்தை நிரப்பும் செல்வராகவனின் தத்துவ ட்வீட்கள்

G SaravanaKumar