நடிகர் சந்தானத்தின் ’கிக்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் ‘கிக்’ என்ற திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடித்து வருகிறார். மேலும் தன்யா ஹோப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அர்ஜுன் ஜான்யா என்பவர் இசையமைத்துள்ளார். ‘கிக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான, நடிகர் சந்தானம் பாடிய ’சாட்டர்டே இஸ் கம்மிங்’ என்ற பாடலும், ரசிகர்களின் வரவேற்பை சம்பாதித்தது.
நடிகர் சந்தானம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது ’கிக்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் முறையாக நடிகர் சந்தானத்துடன் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், ’கிக்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். பல்வேறு நகைச்சுவை திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதால், இது வெற்றிப் படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.