மூன்றாவதாக நிலவில் கால்பதித்த பஸ் ஆல்ட்ரின், 93வது வயதில் நீண்டகால காதலியை மணந்துள்ளார்.
1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 பயணத்தில் சந்திரனில் கால் பதித்த மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின், தனது 93 வது பிறந்தநாளில் தனது நீண்டகால காதலியை மணந்துள்ளார்.
இதை உருதிப்படுத்தும் விதமாக சனிக்கிழமையன்று ட்விட்டரில், ஆல்ட்ரின் தனது மனைவி டாக்டர் அன்கா ஃபௌருடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், “எனது 93வது பிறந்தநாளிலும், லிவிங் லெஜண்ட்ஸ் ஆஃப் ஏவியேஷனால் நான் கௌரவிக்கப்படும் நாளிலும், எனது நீண்டகால காதலியான டாக்டர் அன்கா ஃபூரும் நானும் திருமணம் செய்துகொண்டோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள், மனதிர்க்கு நெருக்கமானவர்களை அழைத்து மிகவும் எளிமையாக திருமண பந்தத்தில் இணைந்தோம். லாஸ் ஏஞ்சல்ஸ் & ஓடிப்போகும் வாலிபர்களைப் போல உற்சாகமாக உள்ளோம்” என்று அவர் ட்விட்டர் குறிப்பில் எழுதினார்.
அவர் பகிர்ந்த இந்த இந்த ட்விட் 22,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் குவித்துள்ளது. கருத்துப் பிரிவில், பல பயனர்கள் இந்த ஜோடியை வாழ்த்தி, “நீங்கள் சந்திரனுக்கு மேல் இருக்க வேண்டும்!” என்று நகைச்சுவையாக எழுதினர்.







