நெல்லை உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா!

நெல்லை உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர். திருநெல்வேலி சந்திப்பில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மணிமூர்த்தீஸ்வரம். 800 ஆண்டுகள்…

நெல்லை உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.

திருநெல்வேலி சந்திப்பில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மணிமூர்த்தீஸ்வரம். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில், ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் ஒரு சில ஆலயங்களில் இதுவும் ஒன்று. இவ்வாலயம் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் 8 நிலை மண்டபங்கள், 3 பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய நீல சரஸ்வதியை தன் மடியில் அமர்த்தி விநாயகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

தன்னுடைய 32 தோற்றங்களில் 8- வது வடிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக விநாயகர் அருள்பாலிக்கிறார். இத்திருக்கோவிலில் பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக மாலையில் கணபதி ஹோமம், மூலவர் உச்சிஷ்ட கணபதிக்கும், உற்ச்சவர் விநாயகப்பெருமானுக்கும் மாப்பொடி, மஞ்சள், வாசனைப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் கோயிலை வலம் வந்து கணபதிக்கு மகா தீபாராதணைகள் காட்டப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

–அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.