லிஃப்ட், டாடா, கிஸ் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றவர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மாஸ்க். விக்ரனன் அசோக் இயக்கிய இப்படத்தில் ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நடிகை ஆண்ட்ரியா மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகிருந்தத இப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்தாலும், கலவையான விமர்சனத்தை பெற்றது.
மாஸ்க் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கவின், கென் ராய்சன் இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கின்றார். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இசையில் உருவாகும் இப்படம் கவினின் 9 வது திரைப்படமாகும்.
இந்த நிலையில் இப்படத்தில் நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதனை படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Meet the boys of #Kavin09 ❤️🔥
Team #ThinkStudios welcomes our dearest @iamSandy_Off onboard to the #Kavin09 family ✨@Kavin_m_0431 @priyankaamohan@kenroyson_ @ofrooooo @ThinkStudiosInd #Kavin #KenRoyson pic.twitter.com/8wuzB5rVN9— Think Studios (@ThinkStudiosInd) January 17, 2026







