’அர்ஜுன் ரெட்டி’ பட இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத் துக்கு ’ஸ்பிரிட்’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.
பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்கள், பான் இந்தியா முறையில் உருவாக் கப்பட்டு வருகின்றன. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அவர் நடிக்கும் படங் கள் தயாராகின்றன. இப்போது அவர் ராதே ஸ்யாம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயின்.
அடுத்து சலார், ஆதிபுருஷ் ஆகிய பிரமாண்ட படங்க ளில் நடித்து வருகிறார். இதையடுத்து நான் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே, அர்ஜுன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்தப் படம் பற்றிய தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிர மாண்ட பட்ஜெட்டில் டி சீரிஸ் என் டெர்டெயின்மென்ட் தயாரிக்க இருக்கும் இந்தப் படத் துக்கு ஸ்பிரிட் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
இது பிரபாஸுக்கு 25-வது படம் ஆகும். இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இந்தப் படத்துக் காக, திரையில் இதுவரை வந்திராத கதைக்களம் ஒன்றை தேர்ந்தெடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘ஸ்பிரிட்’ படப்படிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது. இந்தப் படம் 8 மொழிகளில் உருவாக இருக்கிறது.
Advertisement: