சனாதனம் குறித்த பேச்சு: அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு!

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வினித் ஜிண்டால் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த 2-ம்…

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வினித் ஜிண்டால் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த 2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் அவர் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் வினித் ஜிண்டால் தொடர்ந்த மற்றொரு வழக்க இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் இத்தகைய மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. நாடு முழுவதும் 40க்கும் அதிகமான வழக்குகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு விளம்பர நோக்கத்துடனே இவர்கள் செய்கிறார்கள். மனு தாக்கல் செய்துவிட்டு பிறகு வெளியே வந்து ஊடகங்களிடம் பேட்டி அளிப்பதற்காக தான் இதை இவர்கள் கடைபிடிக்கிறார்கள். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஏற்கனவே இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், நோட்டீஸ் பிறப்பிக்க மறுத்துவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.