ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் பாய்மரப் படகு போட்டியில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஹாங்ஷோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையின் இன்று நடந்த பெண்களுக்கான Dinghy ILCA4 பாய்மர படகுப் போடியில் 17 வயதான நேஹா தாக்கூர் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும், இந்த தொடரில் ஆண்கள் பாய்மர விளையாட்டு போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த விஷ்ணு சரவணன் 34 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியிருகின்றார்.
இன்று காலை நிலவரப்படி இந்தியா ஆசிய விளையாட்டு போட்டியில், இதுவரை மொத்தமாக 5 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 புத்தகங்களுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது .







