”சனாதனம் சர்ச்சை” – அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் X தளத்தில் பதிவு

”சனாதனம் குறித்த சர்ச்சையில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு  தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் X தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து…

”சனாதனம் குறித்த சர்ச்சையில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு  தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட  தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்களை ஒழிப்பது போல் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூரில் உள்ள காவல்நிலையத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கறிஞர்கள் அளித்த புகாரின்பேரில் 153, 295 ஆகிய சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் உத்தர பிரதேச சாமியார் சனாதனம் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கதில் “பிற்ப்பொக்கு எல்லா உயிர்க்கும்” எனும் திருக்குறளை பதிவிட்டு வாழ்த்துக்கள் அதிவீரன் உதயநிதி சார் என குறிப்பிட்டுள்ளார். அதி வீரன் என்பது மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் கதாபாத்திரம் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.