பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 19 பேர் இரண்டு ஆண்டு பணி ஒப்பந்த அடிப்படையில் குவைத்திற்கு பணிபுரிய சென்றுள்ளனர். ஓராண்டு பணியாற்றிய நிலையில் முறையாக சம்பளம் வழங்காததால் நாடு திரும்ப முடியாமல் தவித்த 19 பேரும் மத்திய அரசின் உதவியுடன் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முயற்சியில் மீட்கப்பட்டனர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முறைகேடுகளில் ஈடுபடும் ஏஜென்சிகள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து பேசிய குவைத்தில் இருந்து மீட்கப்பட்ட கண்ணன், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 10 பேர் வேலைக்கு சென்றதாக கூறினார். குவைத்தில் இருந்து தங்களை மீட்டு வந்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.