நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குநர் சணல்குமார் கைது

பிரபல நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரின்பேரில், மலையாள இயக்குநர் சணல் குமாரை போலீஸார் கைது செய்தனர். மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்து எனவும், சிலர் பிடியில் அவர் சிக்கி இருப்பதாகவும்சணல் குமார் தனது சமூக…

பிரபல நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரின்பேரில், மலையாள இயக்குநர் சணல் குமாரை போலீஸார் கைது செய்தனர்.

மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்து எனவும், சிலர் பிடியில் அவர் சிக்கி இருப்பதாகவும்சணல் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில், மஞ்சுவாரியர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்து வந்தார்.

விருதுகள் பெற்ற பல படங்களை சணல்குமார் இயக்கியுள்ளார். கயட்டம் என்ற படத்தில் மஞ்சு வாரியரும், சணல் குமாரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மலையாள படங்களின் பிரபல நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் வெற்றி மாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடித்தார்.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் தன்னை அவமானப்படுத்தி வருவதாகவும், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பதிவுகள் எழுதுவதாகவும் மஞ்சு வாரியர் கேரள போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், பிரபல இயக்குநரும், வழக்கறிஞருமான சணல் குமாரை கேரள மாநிலம், பாறசாலையில் வைத்து எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். தமிழக கேரள எல்லையில் உள்ள பாறசாலை மகாதேவர் கோவிலில் குடும்படுத்துடன் தரிசனம் செய்யும்போது போலீஸார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.