வாரணம் ஆயிரம் திரைப்பட கதாநாயகிக்கு கொரோனா தொற்று!

இந்தி திரைப்பட நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் அதிகமானோர் கொரோனாவால்…

இந்தி திரைப்பட நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திரைப்பிரபலங்களான அக்‌ஷய் குமார், விளையாட்டு வீரர் சச்சின், நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் சோனூ சூட் உள்ளிட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தி திரைப்பட நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘ எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடவுள் பாக்கியத்தில் எனது குடும்பத்தினர் பாதுகாப்பாக உள்ளனர். மேலும் நான் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். எனது முகத்தில் புன்னகையை மலரவைக்க நீங்கள் இருப்பீர்கள்
‘ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

நடிகை சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . இப்படத்தில் அவர் ஏற்று நடித்த ’மேக்னா’ கதாபாத்திரம் பெறும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.