வாரிசு, துணிவு ஆகிய இருதிரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் திரையரங்கு முன்பு பேனர்களை வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு மற்றும் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களும் 11ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனவே அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளன. இதனால் இந்த பொங்கல் அஜித் மற்றும் விஜய் ரசிகர்ளுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது.
வாரிசு, துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும், ஒரே வெளியாக இருக்கும் நிலையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பேனர்களை வைக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் பேனர்கள் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் திரைப்படம் ஒரே நாளில் வெளியாக இருக்கும் நிலையில் அஜித் ரசிகர்கள் அஜித்தின் புகைப்படத்தை 35 அடி பேனர்கள் வைத்தும், விஜய் ரசிகர்கள் விஜயின் புகைப்படத்தை 30 அடி பேனர் வைத்து அவர்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர்.
நாளை வெளியாகும் திரைப்படத்திற்கு அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அவர்கள் வைத்த பேனர்களுக்கு மாலை அணிவித்தும், பால் அபிஷேகம் செய்தும், தோரணங்கள் கட்டியும், கோஷங்களையும் எழுப்பியும் கொண்டாடட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கும் நிலையில் திரையரங்கில் அசம்பாவிதங்களை தவிர்க்க வகையில் போலீசார் திரையரங்குகளில்,ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோகிணி தியேட்டரில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.







