திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.68 லட்சம் ரொக்கம், 3 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது, திருச்சி மாவட்டம், சமய புரம் மாரியம்மன் கோயில் . இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். அவர் கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை, கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள் எண்ணினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், ரூ. 68 லட்சத்து 07 ஆயிரத்து 562 ரொக்கமும், 3 கிலோ 330 கிராம் தங்கமும், 3 கிலோ 340 கிராம் வெள்ளியும், 46 அயல்நாட்டு நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளன. கடந்த 13 நாட்களில் மட்டும் இந்த காணிக்கை கிடைக்கப்பெற்றதாக கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.