அக்டோர் 2ஆம் தேதி, கிராம சபைக்கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித் துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம சபைகளை பொருத்தவரை கடைசி மனிதனுக்கும் அதிகாரம் எனும் காந்தியின் கனவே நம்முடைய கனவு என தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடந்த கிராம சபைதான் கடைசியாக நடந்த கிராம சபை கூட்டம் என்றும், அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை நடத்த தமிழ்நாடு அரசு ஒப்புக் கொண்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
வரும் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கிராமத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து அனைத்து தரப்பு மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள கமல்ஹாசன், கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடைசி மனிதரும் அரசியல் தெளிவு பெறும் வரையில் நம் பணிகள் தொய்வில்லாமல் தொடர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement: