முக்கியச் செய்திகள் சினிமா

சமந்தா பற்றி அப்படி சொல்வதா? பிரபல தயாரிப்பாளர் புது தகவல்

நடிகை சமந்தாவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை இருந்தது என்று பெண் தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் நடித்து வந்த நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சுகமாக சென்று கொண்டிருந்த இவர்கள் திருமண வாழ்வில் என்ன நடந்ததோ, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதங்களாக பிரிந்து இருந்தனர். பின்னர், திடீரென இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர்.

தனது அழகு கெட்டுவிடும் என்பதால் நடிகை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என்றும் அதனால் ஏற்பட்ட பிரச்னையால் விவாகரத்து வரை சென்றார்கள் என்றும் செய்திகள் வெளியாயின. இதற்கிடையே, நடிகை சமந்தா தனது, சமூகவலைதள பக்கத்தில், தன்னை பற்றிய வதந்திகளுக்கு நேற்று பதில் அளித்தார்.

அதில் அவர், என் மீது இரக்கம் காட்டிய அனைவருக்கும் நன்றி. அதே வேளையில், நான் ஒருவருடன் தொடர்பில் இருந்தேன் என்றும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றும் வதந்திகள் வருகின்றன. விவாகரத்து என்பதே வேதனையானது. அதிலிருந்து மீண்டு வர வெகு நாட்களாகும். இது ஒரு பக்கம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் தொடரும் என் மீதான தாக்குதல்களை அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகை சமந்தாவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை இருந்தது என பெண் தயாரிப்பாளர் நீலிமா குணா தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் ’சாகுந்தலம்’ படத்தின் தயாரிப்பாளர் அவர்.

நீலிமா குணா கூறியதாவது: சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் என்ன பிரச்னை என்று எனக்குத் தெரியாது. ஆனால், சமந்தா பற்றி பொய்யாக பரபரப்படும் வதந்திகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியும். சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் இருந்தார். நாங்கள் ’சாகுந்தலம்’ படத்துக்கு அவரை தொடர்பு கொண்ட போது, முதலில் மறுத்தார். குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டதாகச் சொன்னார். முக்கியமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவில் அவர் இருந்தார்.

நீலிமா குணா -சமந்தா

பிறகு, மூன்று அல்லது நான்கு மாதங்களில் ஷூட்டிங்கை முடிப்பீர்கள் என்றால், நடிக்கிறேன் என்றார். அந்த நிபந்தனையுடன்தான் நடித்தார். அதனால் அவர் தொடர்பான காட்சிகளை இயக்குநர் குணசேகர் விரைவில் முடித்துவிட்டார். அப்போது பல தயாரிப் பாளர்களிடம் ஜூன் மாதத்துக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் சமந்தா கூறி வந்தார். இந்நிலையில் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார் என்று வரும் செய்திகள் பொய்யானவை. இவ்வாறு நீலிமா குணா தெரிவித்தார்.

 

Advertisement:
SHARE

Related posts

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு!

Gayathri Venkatesan

ஆம்புலன்ஸ் விபத்து: கர்ப்பிணி உட்பட 4 பேர் படுகாயம்

Vandhana

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எப்போது?