முக்கியச் செய்திகள் விளையாட்டு

கங்காரு பொம்மை வடிவ கேக்கை வெட்ட மறுத்த ரஹானே; ரசிகர்கள் நெகிழ்ச்சி!

கங்காரு வடிவ கேக்கை வெட்டுவதற்கு ரஹானே மறுப்பு தெரிவித்தது, ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி போட்டிகளில் சிறப்பாக விளையாடி உலக அளவில் பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் மும்பை திரும்பிய ரஹானேவுக்கு ரசிகர்கள் கோலாகல வரவேற்பு அளித்துள்ளனர். அவர் தனது மகளுடன் சேர்ந்து கேக் வெட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கங்காரு பொம்மை வடிவ கேக் ஒன்று அவருக்காக தயார் நிலையில் இருந்தது. ஆனால் அதனை வெட்ட சென்ற ரஹானே, கங்காரு பொம்மையை பார்த்த உடனே கேக்கை வெட்ட மறுப்பு தெரிவித்து விட்டார். இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் அவரது சிறந்த குணத்தை காட்டியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2வது நாள் ஆய்வுக்கும் ஒத்துழைக்க மறுத்த தீட்சிதர்கள்

Web Editor

இளைஞர்களை டார்கெட் செய்யும் பாஜக

Saravana Kumar

இந்திய அணி அபார வெற்றி

Saravana Kumar

Leave a Reply