30 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம் செய்திகள்

சிலிர்க்க வைக்கும் நம்பர் 1 சேலம் பறவை மனிதர்கள்

குட் மார்னிங்னுன்னு அலாரம் வைக்காமலே நம்மை எழுப்பி விடுற பறவைகளின் குரலை கேட்க எவ்வளவு இனிமையா இருக்கு. அந்த பறவைகளோட லைப் ஸ்டைல் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அதை பற்றி ஒரு குரூப் ரிசர்ச் பண்ணி நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்திட்டு வர்றாங்க. இவுங்க எல்லாம் பெரிய சயின்டிஸ்ட்ன்னு நினைச்சா, நாமதாங்க ஏமாந்து போவோங்க. இந்த குரூப்பில் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பறவை ஆர்வலர்கள் என ஒரு பெரிய கேங்கா இருக்காங்க. இவுங்க பண்ணின வேலையால் நம்ம சேலத்தோட  ரேஞ்சு வேற லெவலுக்கு போயிட்டுங்க. அப்படி என்ன செஞ்சாங்கங்கிறத வாங்க பார்க்கலாம்.

கடந்த 2017ஆம் ஆண்டு சேலம் பறவையியல் கழகத்தை கணேஷ்வர் என்ற இளைஞர் தொடங்கியுள்ளார். இவரோடு தற்போது ஆயிரகணக்கானோர் பயணிக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, சர்வதேச அளவில் Great Backyard Bird Counting பிப்ரவரி 18ம் தேதியில் இருந்து 21ஆம் தேதி வரை நடந்துள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் Bird Count India (இந்திய பறவைகள் கணக்கெடுப்பு குழுமம்) நடத்தியது. 10ஆவதுஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்வில் சேலம் மாவட்டத்தில் உள்ள 8 ஆயிரத்து 175 பறவைகள் பற்றிய தகவல்களை பதிவு செய்து சர்வதேச அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த மாவட்டத்தை சேர்ந்த  பறவையியல் கழக ஆர்வலர்கள் 5 பேர் முதல் 10 இடங்களுக்குள்  சர்வதேச அளவில் இடம் பெற்று இருக்காங்க. இதுகுறித்து சேலம் பறவையியல் கழக இயற்கை கல்வி பயற்றுநர் ஏஞ்சலின் மனோ கூறியதாவது, பறவை கணக்கெடுப்பு என்பது நீங்க நினைக்கிற மாதிரி பகல்ல ஆரம்பிக்க மாட்டோம். முதல் நாள் இரவு சரியாக 12 மணிக்கு ஆரம்பிப்மோம்.. இது எங்களை பொறுத்தவரை திருவிழா. இதில் ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல், பறவைகளை அனைவரும் சேர்ந்து கணக்கெடுப்போம். இதில் யார் யாருக்கு எப்போ டைம் கிடைக்குதோ. அப்போ கணக்கெடுப்பாங்க. ஆனால் நான் 96 மணி நேரமும் கொஞ்சும் தூங்காமல் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டேன். இது எனக்கு வாழ் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமுங்க என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,இதுல பறவையோட அலகு, தலை, கழுத்து, கலர், இறக்கைகள் என புள்ளிவிபரங்களை சேகரிப்போம். அத்தோடு அதோட குரலையும் கவனமாக பதிவு செய்வோம். இப்படி கணக்கெடுத்துதான் இன்றைக்கு இண்டர்நேஷனல் சாதனைக்குள்ள போயிருக்கோம் என மகிழ்ச்சி பொங்க கூறினார்.

இந்த கணக்கெடுப்பு என்பது குழுவாகவும், தனி நபராகவும் மேற்கொள்றாங்க. இப்படிப்பட்ட தனிநபர் வரிசையில் 384 பறவை பட்டியல் சமர்பித்து தனிநபர் பிரிவில் உலகில் முதலிடம் பெற்றுள்ளார் ஏஞ்சலின் மனோ.

இதுக்கெல்லாம் விருது கிடைக்கும் என நினைத்து செய்யுறதில்ல. இயற்கை மீது கொண்ட காதலால் இதனை செய்யுறாங்க. இவுங்க எடுக்கிற இந்த முயற்சி பறவைகளை பாதுக்காக்க நினைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. இது இயற்கையை சமநிலையில் வைத்து கொள்ள நினைப்பவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளதாம். பறவைகள்தானே என்று உதறி தள்ளிவிட முடியாது. அவைகள் இயற்கையின் மாற்றத்தை குறியீடாகதான் அவற்றை பார்க்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற பறவைகள் கணக்கெடுப்பில் இளம் தலைமுறையினர் அதிகளவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருப்பினும், இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்க வேண்டும் என பறவையியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற சிட்டிசன் சயின்ஸ் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அரசு பள்ளிகள் என்றாலே குறைவாக மதிப்பீடு செய்யும் காலகட்டத்தில், அக்கூற்று உண்மையல்ல என நிருபீத்துள்ளனர் தாரமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கிருஷ்ணம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்த மாணக்கர்கள் பறவைகள் பட்டியல் கணக்கெடுப்பில் கலந்துகொண்டு 4ஆயிரத்து 316 பறவைகளை பட்டியல்களை சமர்பித்து குழு அளவில் தொடர்ந்து 4ஆவது ஆண்டாக சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளனர்.

தளவாய் பட்டி, இலட்சுமாயூர், ஆ.ப.வட்டம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணக்கர்களும், ஜம்பூத்து மலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களும் பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading