சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் பல்கலைக்கழக நிர்வாகத்தில் இது தொடர்பாக புகார் அளித்துளாளர். அந்தப் புகாரின் துணைவேந்தர்…

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் பல்கலைக்கழக நிர்வாகத்தில் இது தொடர்பாக புகார் அளித்துளாளர். அந்தப் புகாரின் துணைவேந்தர் ஜெகநாதன் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் சூரமங்கலம் காவல்துறையினர் துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது, கட்டடங்கள் கட்ட ஒப்பந்தம் மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஜெகநாதன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜெகநாதன் தனது கூட்டாளிகள் சிலரோடு இணைந்து பூட்டர் என்ற தனி நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, துணைவேந்தர் பதவியில் இருக்கும்போதே தனி நிறுவனம் தொடங்கியது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறை ஜெகநாதனை கைது செய்திருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.