முக்கியச் செய்திகள் தமிழகம்

விளாத்திகுளத்தில் போக்குவரத்து தேவையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

விளாத்திகுளத்தில் போக்குவரத்து தேவையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3-ஆம் நாள் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, விளாத்திகுளத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்க அரசு முன்வருமா என எம்எல்ஏ மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், விளாத்திகுளத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் துவக்குவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என தெரிவித்தார். எதிர்காலத்தில் போக்குவரத்து தேவை இருப்பின், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், போக்குவரத்து துறை 48,154 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவித்தார். மேலும், போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விகிதாச்சார அடிப்படையில் நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

Saravana Kumar

’எந்திரன்’ கதை தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

Halley Karthik

மின் வயர் அறுந்து 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி

Gayathri Venkatesan