இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் பட டீசர் வெளியாகிய சில மணி நேரங்களிலே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தனது முதல் படைப்பிலே முத்திரை படைத்த இயக்குநர் மாரிசெல்வராஜின் 2வது படைப்பான கர்ணன் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் ’கண்டா வர சொல்லுங்க’ எனும் பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியானது. அதில் வரும் வசனங்களும், காட்சிகளும் மறைந்து கிடக்கும் ஓர் கதையை உள்வாங்கி படமாக இயக்கியுள்ளார் என்றே சொல்லலாம். யோகி பாபு, லால் தவிர்த்து மற்ற அனைத்து முகங்களும் புது முகங்களே, எதார்த்தமான வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களை நிஜமாகவே நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் மாரிசெல்வராஜ். நடிகர் தனுஷ் கடந்த சில வருடங்களாகவே பொது வெளியில் அவர் பேசும் பேச்சிலும், நடிப்பிலும் பக்குவமாக கையாளும் திறமையை காணலாம். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல டீசரிலும் ஒரு சில காட்சிகள் வந்தாலும் 100% கை தேர்ந்த கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
ஒரு காட்சியில் பருந்து கோழி குஞ்சுகளை தூக்கி செல்வது போன்று அமைக்கப்பட்டிருக்கும் அப்போது அந்த வயதான பெண்மணி ’ நான் சொல்லியும் என் குஞ்சை தூக்கிட்டு போயிட்டேல, இரு ஒன் சிறக ஒடுச்சு, கால ஒடிக்க ஒருத்தன் வருவான்’ என்று கூறும் வசனமும் ’யப்பா கர்ணா.. நா காட்டு பேச்சி பேசுறேன், ஒருத்தனையும் விடாத அடிச்சு தொரத்து’ எனும் வசனமும் ஆயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குரல் வளையை நெறிக்கும் சமூகம் மத்தியில் உரிமை குரலாய் ஓங்கி ஒலிக்கும் கர்ணனின் குரலும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பின்னணி இசையும் காட்சி தொகுப்பும் கிளாஸ்ஸாக தயாராகி வெளியாகியுள்ள டீசர் இணையத்தில் பேசு பொருளாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் இத்திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது