“தலைவன் செல்வராகவன்” – ரசிகனின் ட்வீட் வைரல்!

இயக்குநர் செல்வராகவனின் ரசிகர் ஒருவரின் மயக்கம் என்ன படம் குறித்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின்…

இயக்குநர் செல்வராகவனின் ரசிகர் ஒருவரின் மயக்கம் என்ன படம் குறித்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படம் 2011ஆம் ஆண்டு வெளியானது. தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தில், புகைப்படக் கலைஞராக தனுஷ் நடித்திருந்தார்.

மூத்த புகைப்படக் கலைஞரால் ஏமாற்றப்படும் தனுஷ் மனஉளைச்சலுக்கு ஆளாகி கடைசியில் புகைப்படத் துறையில் வெற்றி பெற்று சிறந்த புகைப்படத்திற்கான விருதைப் பெறுவார். இந்தப் படத்தில் தனுஷின் பெயர் கார்த்திக். இதே பெயரில் தற்போது நேஷனல் ஜியாக்ரஃபி ஆண்டின் சிறந்த புகைப்படத்திற்கான விருதை கார்த்திக் சுப்பிரமணியம் வென்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்த ரசிகர் ஒருவர் இயக்குநர் செல்வராகவனை டேக் செய்து, “தலைவன் செல்வராகவன் மயக்கமென்ன படத்தில் ஹீரோவிற்கு இந்தப் பெயரை வைத்திருப்பார்” என பதிவிட்டு இருந்தார். இந்த ட்வீட்டை இயக்குநர் செல்வராகவன் லைக் செய்துள்ளார். இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/ellamokthaane/status/1635320920624738304?t=S2hU44hwPf0Fo5BLXaAKyA&s=19

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.