எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு – மர்ம நபர்களை கைது செய்யக்கோரி அதிமுகவினர் போராட்டம்..!

திருப்போரூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்ம அவர்களை கைது செய்யக்கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு நேற்று…

திருப்போரூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்ம அவர்களை கைது செய்யக்கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள
எம்ஜிஆர் சிலைக்கு நேற்று இரவு  மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால்  இன்று காலை அதனை கண்ட அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த மர்ம நபர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் காவல்துறை மெத்தனப்போக்கு காட்டியதாக கூறி அதிமுக ஒன்றிய
செயலாளர் குமரவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் டிடிஎஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதன் பின்னர் அதனை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.