தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திருவள்ளுவரின் திருவுருவ படத்தில் அவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என சமத்துவத்தை வலியுறுத்திய திருவள்ளுவரை சனாதனி என்று வரையறுக்கும் தமிழ்நாடு ஆளுநரின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது.
எம்மதத்தையும் சாராத வரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமானப்படுத்தும் செயல்.
ஆளுநர் அர்லேகர் இச்செயலுக்காக தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.







