பாதுகாப்பான பயணம் குறித்து நியூஸ் 7 தமிழ் இன்று பிரம்மாண்ட கள ஆய்வு மேற்கொண்டுள்ளது.
ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து நியூஸ்7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வின் போது மதுரை மாநகரில் பள்ளிகள் உள்ள இடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல, படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்தை விளக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காலை மாலை என இரு வேளைகளிலும் அதி அளவு பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அண்மைச் செய்தி: தேர் விபத்து; ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்
இதேபோல, நெல்லையில் கிராமப்புறங்களிலிருந்து நகர்புறங்களுக்கு மாணவர்கள் வர ஒரே ஒரு பேருந்து மட்டுமே உள்ளது எனவும், கூட்டம் அதிகமாக இருந்தால் ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்துவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், இந்த கள ஆய்வு குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், நியூஸ் 7 தமிழ் மிக முக்கிய முன்னெடுப்பை எடுத்துள்ளது எனவும், இதன் வழியாக அரசின் கவனத்திற்கு சென்று எங்களுக்கு தேவையான பூர்த்தி செய்யப்படும் என நம்புவதாக தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








