மகரவிளக்கு பூஜை நெருங்குவதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வெகுவிமரிசையாக மண்டல பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி மண்டல பூஜை நடந்தது. பிறகு அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பக்தர்களின் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருப்பதால் இந்த சீசனின் பாதியில் தரிசனம் செய்ய கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ம் தேதி நடைபெறுகிறது. ன்று மட்டும் 89,925 பேர் தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்யவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். இனி வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.