தூய்மைப் பணியாளரை வெறுங்கையால் சாக்கடையை சுத்தம் செய்ய வைத்த திமுக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்வு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வெளியான போது தான் தன்னுடைய
பழக்கம் எனவும் காயத்திரி ரகுராம் கூறிய கருத்துகளுக்கெல்லாம் பதில் சொல்ல
வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூறினார்.
சென்னை தண்டையார்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் முன்னிலையில் தூய்மைப் பணியாளர் வெறும் கையால் சாக்கடையை அள்ளியதற்கு கண்டனம் தெரிவித்தார். இவ்விஷயத்தில் முதலமைச்சர் தலையிட்டு, திமுக எம்.எல்.ஏ எபினேசர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அனுப்பிட்டேன் ஊடக மற்றும் பத்திரிகையாளர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறிய அண்ணாமலைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுப்ரமணிய சுவாமியை சந்தித்து அவரிடம் பேசி நான் நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுப்பிரமணியசாமி அழைக்கக்கூடிய சான்றிதழ் தனக்கு தேவை இல்லை எனவும் அண்ணாமலை ஆவேசமாக பேசினார்.
ஈஷா யோகா மையத்தில் பெண் மாயம் தொடர்பாக காவல்துறை உரிய
விசாரணை நடத்த வேண்டும் என கூறிய அண்ணாமலை, ஆதார் கார்டு இருக்கும் போது மக்கள் ஐடி எதற்காக கொண்டு வர வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.
தனி நாட்டிற்கான அடைத்தலும் குறித்து திமுக கனவில் கூட இணைந்து பார்க்க கூடாது எனவும் அண்ணாமலை கூறினார். பிரதமர் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக அரசிடமிருந்து சில தொலைக்காட்சிகள் அதிக பணம் பெறுவதாகவும் அவ்வாறு பணம் பெறக்கூடிய தொலைக்காட்சிகளின் நிருபர்கள் தான் அதிகம் கேள்வி கேட்பதாக அண்ணாமலை கூறியதால் நிருபர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.