டெலிகிராம் பயனர்களுக்கு புதிய பிரீமியம் சந்தா சேவை குறித்து அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த டெலிகிராம் பிரீமியம் திட்டத்திற்கு மாதம் $4.99 (இந்திய மதிப்பில் 389 ரூபாய்) செலவாகும் என்று டெக்ரன்ஞ்ச் அறிக்கை கூறியுள்ளது.
டெலிகிராம் செயலியில் புதிய பிரீமியம் பிளான் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கடந்த ஜூன் 13 ஆம் தேதி தெரிவித்திருந்தார். மேலும் டெலிகிராம் செயலியில் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பிரீமியம் சேவை மூலம், டெலிகிராம் பிரீமியம் பயனர்களுக்கு, இரண்டுமடங்கு வேகமான பதிவிறக்கம், 4ஜிபி அளவு வரை பைல்ஸ்களை அனுப்ப அனுமதிக்கும். தற்போது, பயனர்கள் 2ஜிபி அளவிலான பைல்ஸ்களையே அனுப்ப முடியும்.
இது தவிர, பிரீமியம் பயனர்கள் 1,000 சேனல்களைப் பின்தொடர முடியும் மற்றும் 200 சாட்களுடன் 20 சாட் போல்டர்ஸ் வரை உருவாக்க முடியும். மேலும் பயனர்களுக்கு புதிய சாட் மேலாண்மை கருவிகளும் வழங்கப்படும். அதோடு பிரதான சாட் பட்டியலில் 10 சாட்கள் வரை பின் செய்ய முடியும்.
மற்றும் 10 பிடித்த ஸ்டிக்கர்களை சேமிக்க முடியும் என்றும் பயனர்கள் முழுத் திரை அனிமேஷனுடன் கூடிய ஸ்டிக்கர்களை அனுப்ப முடியும், இந்த ஸ்டிக்கர்களை மாதந்தோறும் டெலிகிராம் புதுப்பித்துக்கொண்டே இருக்கும். கடைசியாக, டெலிகிராம் பிரீமியம் பயனர்கள், லைவ் டிவியில் விளம்பரமில்லா அனுபவத்தையும் பெறுவார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
– சத்யா விஸ்வநாதன்