நெல்லை மாவட்டம் களக்காட்டில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆனதால் ஆத்திரமடைந்த இளைஞர், காதலியுடன் எடுத்த புகைப்படத்தை ஊர் முழுவதும் போஸ்டராக ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை களக்காடு அடுத்த மஞ்சுவிளையை சேர்ந்த விஜய்ரூபன் களக்காட்டில் பறவைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரும், மேலபத்தையை சேர்ந்த இளம் பெண்ணும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் 10 நாட்களுக்கு முன் இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: உக்ரைனின் கார்கீவ்வை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு
இதனை அறிந்த விஜய்ரூபன், தனது காதலியுடன் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை களக்காடு நகர் பகுதி முழுவதும் போஸ்டராக ஒட்டியுள்ளார். கவிதை வசனங்களோடு அவர் ஒட்டியுள்ள போஸ்டர் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள களக்காடு போலீசார், விஜய்ரூபனை தேடி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான விஜய் ரூபன், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய நிலையில் காதலிலும் தோல்வியடைந்ததால் அவர் இப்படி செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








